சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிற்கும், இலங்கைக் குழுவிற்குமிடையில் இன்று வோஷிங்டனில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.
நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை காலை அமெரிக்கா சென்றுள்ளது.
நிதியமைச்சர் அலி சப்ரி, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், தொடர் கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளன.
நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் தாமதமான முடிவை எட்டியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இந்த தவறை நேற்று ஏற்றுக்கொண்டார்.
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் கடனாளிகளுக்குப் பணம் கொடுப்பதற்கும் உதவுவதற்காக இலங்கை இந்த ஆண்டு 4 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கோருகிறது.
பத்திரங்கள் மற்றும் அரசாங்கங்களிடம் இருந்து பெற்ற கடன்கள் உள்ளிட்ட வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு விவாதம் நடைபெறுகிறது.