ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவின் ஊடகமான தெரண தொலைக்காட்சியில், மக்கள் எழுச்சிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து தெரிவிக்கப்பட்டதற்கு பரவலான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
காலி முகத்திடலில் இடம்பெறும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ‘பீச் பார்ட்டி’ என குறிப்பிட்ட காட்சி, நெட்டிசன்களால் பகிரப்பட்டு, வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் நடத்தியதாக நெறியாளர் குறிப்பிட்டதுடன், கர்தினாலின் நடவடிக்கைகளை குற்றம்சாட்டியிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு, தீவிரமாக செயற்பட்ட ஊடகங்களில் இந்த ஊடகமும் ஒன்று.
மக்கள் எழுச்சியை கொச்சைப்படுத்தியதையடுத்து, அந்த ஊடகத்தை புறக்கணிக்க வேண்டுமென நெட்டிசன்கள் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
இதையடுத்து, தெரண வலையமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,
‘ஸ்டேட் ஒஃப் தி நேஷன்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான மஹியாஷ் ஜானி, நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சையால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒளிபரப்பப்பட்டதைபோல், வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் வழங்குபவரின் கருத்துக்கள் மட்டுமே. அவை தெரண ஊடக நெட்வொர்க்கின் மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கவில்லை” என கூறியுள்ளது.
Well done @AdaDerana_24 @tvderana impressive dollar talk. Presenter needs a good beach party show with ISIS around. Who’s script is this? මොනාද බං මේ 💩 වැඩ? Protest එක අන්තවාදීන් එක්ක කරන beach party එකක් ලූ. TV Station එකත් විගණනය කරන්න වෙයි වගේ නේද? pic.twitter.com/N4WtAdWPs2
— Budu℠ (@BuduMalli) April 17, 2022