தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கண்டன ஊர்வலத்தின் இறுதி நாள் இன்றாகும்.
அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு மொரட்டுவையில் இருந்து பேரணி ஆரம்பமாகி நகர மண்டபத்தை சென்றடையும்.
ஞாயிற்றுக்கிழமை வாதுவவில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, நேற்று மொரட்டுவையை வந்தடைந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கருத்துத் தெரிவிக்கையில், இந்தப் போராட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என மக்கள் அனைவரும் ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதில் எந்த மாற்றமும் ஏற்படாது என பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே அனைத்து நபர்களும் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1