27.4 C
Jaffna
January 31, 2025
Pagetamil
இலங்கை

அமைச்சு மாற்றத்தை மக்கள் கோரவில்லை; அரசின் முடிவை மக்கள் ஏற்கமாட்டார்கள்: பெரமுன எம்.பி!

புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தினுள் இருந்து மற்றொரு குழு அமைச்சுப் பதவிகளை கைப்பற்றுவது மக்களை மேலும் கிளர்ச்சியடையச் செய்யும் என்றார்.

அமைச்சுக்களை மாற்றுவதும் அமைச்சர்களை மாற்றுவதும் தற்போது மக்கள் கோரும் ஒன்றல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்காலிக நடவடிக்கைகளை பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், எனவே பொதுமக்கள் தெரிவிக்கும் பிரச்சனைகளை அரசு கேட்டு உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எஸ்.பி. திசாநாயக்க

east tamil

ஆசிரியை படுகொலை

east tamil

டெங்கு அபாயத்தில் சிக்கி தவிக்கும் மேல் மாகாணம்

east tamil

அர்ச்சுனாவின் தங்கம் இன்று பொலிஸ் விசாரணையில்!

Pagetamil

மஹிந்தவின் சொகுசு வாழ்க்கைக்காக செலவிடப்படும் பெருந்தொகை நிதி!

Pagetamil

Leave a Comment