கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தைச் சூழவுள்ள பகுதியை தடுப்புச்சுவர் போட்டு மூடுவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடந்து வருவதால், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து ஜனாதிபதி கடமையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியை மூடி பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
7 வருடங்களின் பின்னர் இந்த பகுதி மூடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த வீதித் தடைகளை அகற்றி அப்பகுதியை பொது மக்களின் பாவனைக்கு திறந்துவிட நடவடிக்கை எடுத்திருந்தது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1