26.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

யாழில் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி: 2 மாத கர்ப்பம்!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் உயிரிழந்த நிலையில் பாடசாலை மாணவியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

மாணவி திடீரென நோய்வாய்ப்பட்டார் என குறிப்பிட்டு, நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மாணவியை குடும்பத்தினர் அனுமதித்தனர். எனினும்,மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது, உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

கரவெட்டி கிழக்கு, கிழவி தோட்டம் பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் விஷ்ணுகா (19) மாணவியே உயிரிழந்திருந்தார். அவர் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி. இம்முறை க.பொ.த உயிர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இதையடுத்து, பருத்தித்துறை நீதிமன்றத்தில் நெல்லியடி பொலிசார் பி அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
2
+1
4

இதையும் படியுங்கள்

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது

east tamil

வெடுக்குநாறிமலையில் நிம்மதியான வழிபாட்டுக்கு வழி வேண்டும் – துரைராசா ரவிகரன்

east tamil

முன்னாள் அமைச்சர் ஐவருக்கு விசாரணை

east tamil

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனைக் கடத்த முற்பட்டமைக்கு கிளி மாவட்ட ஊடக அமையம் கண்டனம்

Pagetamil

Leave a Comment