இன்று காலை இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட N750GFஇலக்க விமானம், பிரித்தானிய கோடீஸ்வரர் ஜோர்ஜ் டேவிஸுக்குச் சொந்தமானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை இந்த விமானம் டுபாய் நோக்கி புறப்பட்டது.
இந்த விமானத்தில் பஷில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதாக வதந்திகள் பரவியிருந்தன.
எனினும், இந்த விமானம் கோடீஸ்வரர் டேவிஸ் உட்பட இரண்டு வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிக்கொண்டு மார்ச் 28 அன்று இலங்கையை வந்தடைந்தது.
அது ஏப்ரல் 16 அன்று காலை இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாய்க்கு புறப்பட்டது.
டேவிஸ் ஒரு பிரித்தானிய ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பல முன்னணி ஆடை பிராண்டுகளின் உரிமையாளராக உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1