Pagetamil
சினிமா

நடிகை நதியா: 38 வருட திரை வாழ்க்கையில் முதல்முறை!

தெலுங்கில் உருவாகி வரும் படம் ஒன்றிற்கு நடிகை நதியா தனது சொந்த குரலில் டப்பிங் செய்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 1984 ஆம் ஆண்டு ‘பூவே பூச்சூடவா’ திரைப்படம் மூலம் கதாநயகியாக அறிமுகமானவர் நடிகை நதியா. இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் கொடிக்கட்டி பறந்தவர். 80 மற்றும் 90களில் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர்.

இதனைத்தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ’எம்.குமரன் S/O மகாலட்சுமி’ என்ற திரைப்படம் மூலம் நடிகர் ஜெயம்ரவிக்கு அம்மாவாக நடித்து சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்த நதியா, ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படத்திற்கு பிறகு நடிகை நதியா குணசித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை நதியா Ante Sundaraniki என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். நடிகர் நானி மற்றும் நடிகை நஸ்ரியா இருவரும் ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தில் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

38 ஆண்டுகால திரை வாழ்வில் முதல் முதலாக நடிகை நதியா இந்த படத்திற்காக தெலுங்கில் சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார். இது குறித்த தகவலை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், Ante Sundaraniki படத்திற்காக முதல் முதலாக தெலுங்கில் சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளதாகவும், எனக்கு ஊக்கம் அளித்த இயக்குனர் மற்றும் குழுவினருக்கு எனது நன்றி என்றும் நதியா தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!