நடிகை ரம்யா நம்பீசன் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சசிகுமார் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘அஞ்சல’ படத்தின் தங்கம் பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம். இப்படத்தில் 2 நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்கின்றனராம்.
அதில் ஒருவர் தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா. தற்போது மற்றொரு கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கருணாஸ், விக்னேஷ், பாகுபலி பிரபாகர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் இப்படத்தை எஸ்கேஎல்எஸ் கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் சார்பில் இ.மோகன் தயாரிக்கிறார்.
ட்ராவல் கதைக்களத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மலைப் பகுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.