ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (12) இரவு நடைபெறவிருந்த கலந்துரையாடலை புறக்கணிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
சுயேட்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் சாந்த பண்டாரவை அரச பக்கம் வலைவீசி இழுத்து இராஜாங்க அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய கலந்துரையாடலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் சுயாதீன நாடாளுமன்றக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (12) இரவு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1