இந்திய கடன் வசதியின் கீழ் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட அரிசியை நாடளாவிய ரீதியில் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் அரச கூட்டுறவு நிறுவனங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் சம்பா ரூ.130க்கும், நாட்டு அரிசி ரூ.110க்கும், சிவப்பு பச்சை அரிசி ரூ.110க்கும் கிடைக்கும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கள, தமிழ் புத்தாண்டை இலக்காகக் கொண்டு இந்திய கடன் வசதியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 40,000 மெட்ரிக்தொன் அரிசியின் ஒரு பகுதியாக 11,000 மெட்ரிக் தொன் அரிசி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
7,000 மெட்ரிக் தொன் நாட்டு அரிசி, 2,000 மெட்ரிக் தொன் சம்பா, 2,000 மெட்ரிக் தொன் சிவப்பு பச்சை அரிசி ஆகியவை அடங்கும்.
நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்படும் கடன் வசதியின் கீழ் மற்றுமொரு அரிசிக் கப்பல் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு வரவுள்ளது.