ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் 41 சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற இடைக்கால நிர்வாகத்தை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது.
அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய ஆட்சி முறை தொடர்பில் யோசனை சமர்ப்பித்திருந்தனர்.
இது தொடர்பில் அவர்களை நேற்று ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இந்த விடயத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. எவ்வாறாயினும், மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்காக மீண்டும் சந்திப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறினார்.