பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் திடீர்ப் பயணமாக உக்ரேனின் கீவ் நகருக்குச் சென்று ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்க்கியை சந்தித்துப் பேசியுள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாடுமைய மேற்கு நாடுகள், உக்ரைனை உற்சாகமூட்டி வரும் நிலையில், ஜோன்சனின் இத்த பயணம் அமைந்துள்ளது.
உக்ரேனுக்கு மேலும் 120 கவச வானங்களையும் புதிய எவுகணை முறியடிப்புச் சாதனங்களையும் வழங்க ஜோன்சன் உறுதியளித்தார்.
தலைவர்கள் இருவரும் கீவ் நகர வீதிகளைப் பார்வையிட்டு மாண்டோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்
உக்ரேனில் ரஷ்யா தனது இராணுவத் தலைமைத்துவத்தைச் சீரமைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஜோன்சன் அங்கு சென்றுள்ளார்.
சிரியாவில் போரிட்டு அனுபவம்வாய்ந்த ஜெனரல் அலெக்சாண்டர் டிவோர்னிகோவ் உக்ரேனில் ரஷ்யப் படையினரின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1