பிரான்சில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.
ஜனாதிபதி பதவிக்காக தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும், மரீன் லே பென்னும் போட்டியிடுகின்றனர்.
ஐந்தாண்டுக்கு முன்பு இருந்ததுபோல் அல்லாமல் இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மக்ரோன் உக்ரேனிய விவகாரத்தைக் கையாண்ட விதம் அவருக்கு ஆதரவை அதிகரித்திருக்கிறது.
வலுவான பொருளியல் மீட்சியும் சிதறிக் கிடக்கும் பலவீனமான எதிர்த்தரப்பும் அவருக்குச் சாதகமான அம்சங்கள்.
எனினும் ஓய்வு வயதைக் கூட்டியதும் உயர்ந்து வரும் பணவீக்கமும் மக்ரோனுக்குப் பாதகமாக உள்ளன.
தீவிர வலசாரியான எதிர்த்தரப்பு வேட்பாளர் லே பென் ஐரோப்பாவுக்கு முதலிடம் தரவேண்டும் என்று விரும்புபவர்.
முதல்சுற்றுத் தேர்தலில் மக்ரோன் வெல்வார் என்றே கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1