27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

தற்போதைய நெருக்கடியை இலகுவாக தவிர்த்திருக்கலாம்; கோட்டா அரசின் கையாலாகாத்தனமே சிக்கல்: ரணில்!

தற்போதைய அரசாங்கம் நிதி சவால்களை கையாள்வதில் திறமையின்மையால் நாட்டை ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளுவதாக குற்றம் சுமத்தியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் முற்றாகத் தோல்வியடைந்தமையால் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ANI இந்திய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

2019 இல்- தமது காலத்தில், நாட்டின் பொருளாதாரம் ஒரு மூலதன உபரியுடன் ஆரோக்கியமான நிலையில் இருந்தது, ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் திறமையின்மை மக்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது என்றார்.

“மோசமான பொருளாதார நிலைமை அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. நடப்பது நாட்டிற்கு பேரழிவு. இரண்டு ஆண்டுகளாக, இந்த அரசாங்கம் பொருளாதாரப் பிரச்சினைகளின் அனைத்து அறிகுறிகளையும் புறக்கணித்தது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில்லையென்ற நிலைப்பாட்டில் இருந்து,  உரிய நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தை அணுகவில்லையென சுட்டிக்காட்டினார்.

தற்போது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை அணுகினாலும் எந்தவொரு அர்த்தமுள்ள நிவாரணம் வருவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று முன்னாள் பிரதமர் கூறினார்.

இந்தியாவினால் நீடிக்கப்படும் எரிபொருளுக்கான கடன் வரியானது மே மாதம் இரண்டாவது வாரம் வரை மட்டுமே நீடிக்கும் என தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதன் பின்னர் இலங்கை கடும் சிக்கலில் சிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறும்போது மாற்று வழிகளைத் தேடுவதன் முக்கியத்துவத்தை முன்னாள் பிரதமர் வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிப்பு

east pagetamil

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்களப்பில் சோகம்

east pagetamil

இணைப்பேராசிரியர் ரிச்சர்ட் பிரியோ நூலக நிறுவனத்துக்கு வருகை

east pagetamil

‘பைத்தியக்காரன் அர்ச்சுனாவை வெளியேற்றுங்கள்’: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு!

Pagetamil

Leave a Comment