ஈரானில் உள்ள இடுகாட்டில் 3 இளம்பெண்கள் நடனமாடிய காணொளி ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை அவர்களைக் கைது செய்துள்ளதாக நெய்ஷாபூர் நகரில் உள்ள அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நெய்ஷாபூரின் தியாகிகள் அடக்கம் செய்யப்பட்ட இடுகாட்டில் ஆடிய மூவரை அடையாளம் செய்து கைதுசெய்யுமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.
தியாகிகளின் குடும்பத்தினரின் உணர்வுகள் புண்பட்டதாக வழக்கறிஞர் முகமது ஹொசைனி கூறினார்.
சமுதாய வழக்கங்களுக்கு எதிரான செயலைச் செய்ததற்காக மூவரும் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.
ஈரானில் நடனமாடுவது குற்றமல்ல. ஆனால் பொது இடங்களிலோ இணையத்திலோ பொது நாகரிகத்தை புண்படுத்தும் வகையில் சிலர் நடனமாடினால் அவர்கள் சட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1