25.6 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

கஞ்சாவிற்கு அடிமையான மகனை மரத்தில் கட்டி வைத்து மிளகாய்த்தூள் அடித்த தாய் (VIDEO)

கஞ்சாவிற்கு அடிமையான மகனை, மரத்தில் கட்டி வைத்து, முகத்தில் மிளகாய்த்தூய் தூவி தண்டனை வழங்கியுள்ளார் தாயார்.

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தனது 15 வயது மகன் கஞ்சாவுக்கு அடிமையானது தெரியவந்ததும், கோபமடைந்த தாயார், மகனிற்கு கடுமையான தண்டனை வழங்க தீர்மானித்தார்.

மகனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து, போதைக்கு அடிமையானதற்காக அவனை தண்டிக்க கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளார்.

மேலும் மற்றொரு பெண்ணின் உதவியுடன், முகம் முழுவதும் மிளகாய்ப் பொடியை பூசினார்.

கண்களில் ஏற்பட்ட எரிச்சலால் சிறுவன் அலறித்துடித்தான். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதை கைவிடுமாறு பெண்ணிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனது மகன் கஞ்சா பழக்கத்தை கைவிடுவதாக உறுதி அளித்தால்தான் தண்டனையை கைவிடுவேன் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

தான் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதாக சிறுவன் உறுதியளித்ததை அடுத்து அந்த பெண் தனது மகனின் கைகட்டுகளை அவிழ்த்துவிட்டார்.

இந்த காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

Leave a Comment