25.8 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

‘மாத்தி யோசியுங்களப்பா…’: சித்தப்பாவின் தடையை மீறி VPN மூலம் ருவிற்றரில் பதிவிட்ட நாமல்!

சமூக ஊடங்களை அரசாங்கம் தடைசெய்துள்ள நிலையில், VPN மூலம் சமூக ஊடகத்தை செயற்படுத்துவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிறப்பித்தது. பின்னர் ஊரடங்கு சட்டத்தை அறிவித்தது. நள்ளிரவு முதல் சமூக ஊடகங்களை தடைசெய்துள்ளது.

எனினும், VPN ஊடாக சமூக ஊடகத்தை செயற்படுத்த முடியும். அதனை கட்டுப்படுத்த முடியாது. அரசின் தடையை மீறி இலங்கை சமூக ஊடக பரப்பு VPN மூலம் ஓரளவு இயங்கியே வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் நாமல் இன்று ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

‘சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். VPN இன் கிடைக்கும் தன்மை, நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே, அத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய அட்டை

Pagetamil

ஒரு கிலோ கோழி இறைச்சி இலஞ்சம் வாங்கியவர்கள் கைது!

Pagetamil

பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

east tamil

Leave a Comment