2022ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டில் 12 ராசிக்களுக்குமான பலன்களை ஜோதிடமணி எம்.பஞ்சாட்சர சர்மா கணித்து வழங்கியுள்ளார்.
தமிழ் வருடங்களில் தற்சமயம் நடப்பது 35வது ஆண்டான பிலவ வருஷமாகும். 36வது ஆண்டான சுபகிருது வருஷம் சித்திரை மாதம் முதல் நாளாக (14.4.2022) வியாழக்கிழமை உத்திராயண புண்ணியகாலம் வஸந்த ருது சுக்ல பட்சம் (வளர்பிறை) திரயோதசி திதி (பிரதோஷம்) பூரம் நட்சத்திரம் நான்காம் பாதம், விருத்தி நாமயோகம், கௌலவ கரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி 07 நாழிகை அளவில் காலை 08.41.15 மணிக்கு (ஐ.எஸ்.டி.) சூரிய பகவான் ஹோரையில் ரிஷப லக்னத்தில் இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
பிலப வருஷம் பங்குனி மாதம் 30ஆம் திகதி (13.4.2022) புதன்கிழமை உத்திராயண புண்ணியகாலம் சிசிர ருது சுக்லபட்சம் (வளர்பிறை) துவாதசி திதி பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாகம் விருத்தி நாமயோகம், பவ கரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி 25 நாழிகை அளவில் பிற்பகல் 03.47.45 மணிக்கு (ஐ.எஸ்.டி.) சனி பகவான் ஹோரையில் சிம்ம லக்னத்தில் குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
சுபகிருது வருஷம் தட்சிணாயனம் க்ரீஷ்ம ருது ஆடி மாதம் 13ஆம் திகதி (29.07.2022) சுக்லபட்சம் (வளர்பிறை) வெள்ளிக்கிழமை பிரதமை திதி ஆயில்ய நட்சத்திரம் முதல் பாதம் சித்தி நாமயோகம், கிம்ஸ்துக்கின கரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி 12.1/2 நாழிகை அளவில் காலை 10.58 மணிக்கு (ஐ.எஸ்.டி.) குருபகவான் ஹோரையில் குருபகவான் மீன ராசியிலேயே வக்கிரமடைகிறார்.
சுபகிருது வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 8ஆம் திகதி (24.11.2022) சுக்லபட்சம் (வளர்பிறை) வியாழக்கிழமை, பிரதமை திதி, அனுஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம், அதிகண்ட நாம யோகம், கிம்ஸ்துக்கின கரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி 17.1/2 நாழிகை அளவில் நண்பகல் 12.50 மணிக்கு (ஐ.எஸ்.டி.) சனிபகவான் ஹோரையில் குருபகவான் மீன ராசியிலியே வக்கிர நிவர்த்தி அடைந்து இந்த சுபகிருது ஆண்டு முழுவதும் மீன ராசியிலேயே சஞ்சரிக்கிறார்.
சுபகிருது வருஷம் உத்திராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 16ஆம் திகதி (29.4.2022) கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) வெள்ளிக்கிழமை சதுர்த்தசி திதி, ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் விஷ்கம்பநாமயோகம், பத்திரை கரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி 4.3/4நாழிகை அளவில் காலை 07.46 மணிக்கு (ஐ.எஸ்.டி.) புதபகவான் ஹோரையில் அதிசார கதியில் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
சுபகிருது வருஷம் உத்திராயணம் வஸந்த ருது வைகாசி மாதம் 22ஆம் திகதி (05.6.2022) சுக்கிலபட்சம் (வளர்பிறை) ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி, ஆயில்ய நட்சத்திரம் நான்காம் பாதம் வ்யாகாத நாமயோகம், கெüலவ கரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி 41 நாழிகை அளவில் இரவு 11.18 மணிக்கு (ஐ.எஸ்.டி.) சந்திரபகவான் ஹோரையில் கும்ப ராசியிலியே சனிபகவான் வக்கிரமடைகிறார்.
சுபகிருது வருஷம் உத்திராயணம் க்ரீஷ்ம ருது, ஆனி மாதம் 28ஆம் திகதி (12.7.2022) செவ்வாய்க்கிழமை சுக்கிலபட்சம் (வளர்பிறை) சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் பிராம்யநாமயோகம், கரஜை கரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி 22.1/2 நாழிகை அளவில் பிற்பகல் 02.56 மணிக்கு (ஐ.எஸ்.டி.) சூரியபகவான் ஹோரையில் வக்கிரகதியிலேயே கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகிறார்.
சுபகிருது வருஷம் தட்சிணாயனம் சரத் ருது ஐப்பசி மாதம் 7ஆம் திகதி (24.10.2022) திங்கட்கிழமை கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தசி திதி அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் வைதிருதி நாமயோகம், சதுஷ்பாத பாதகரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் விடியற்காலை 03.51 மணிக்கு (ஐ.எஸ்.டி.) சூரியபகவான் ஹோரையில் மகர ராசியில் சனிபகவான் வக்கிர நிவர்த்தியடைகிறார்.
சுபகிருது வருஷம் உத்திராயணம் ஹேமந்தருது தை மாதம் 3ஆம் திகதி (17.01.2023) செவ்வாய்க்கிழமை கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) தசதி திதி விசாக நட்சத்திரம் நான்காம் பாதம் கண்ட நாமயோகம், பவகரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 31 அளவில் இரவு 06.01 மணிக்கு (ஐ.எஸ்.டி.) சனிபகவான் ஹோரையில் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
ராகு / கேது பகவான்கள் இந்த சுபகிருது ஆண்டு முழுவதும் முறையே மேஷ / துலாம் ராசிகளிலேயே சஞ்சரிக்கிறார்கள்.இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் மேலே குறிப்பிட்ட குரு, சனி, ராகு / கேது பகவான்களின் சஞ்சாரங்களையும் கணித்து எழுதப்பட்டுள்ளது.இந்த சுபகிருது வருஷம் ரிஷப லக்னத்தில் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறக்கிறது. கேந்திர வரிசையிலும், திரிகோண வரிசையிலும் முதல் இடம் வகிப்பது லக்னமே ஆகும்.
அதனால் எந்த ஜாதகத்திற்கும் லக்னத்தின் சுப பலம் அவசியமாகும். லக்னத்திற்கும், ருணம் (கடன்) ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்குமதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். லக்னம் வலுத்திருப்பதால் செல்வம் செல்வாக்கு உண்டாகும். தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் குணமும், தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்தும் தன்மையும் உண்டாகும். அனைவரையும் சமமாக பாவிக்கும் எண்ணமும் பெருந்தன்மையான குணமும் சுபத்துவம் பெற்ற லக்னத்தால் அமைகிறது.
லக்ன ஜென்ம நட்சத்திரமும் தாரா பலனும்
துருவ நாடியில் சத்யாச்சாரியாரின் வாக்குப்படி ஜென்ம லக்னம், சந்திர லக்னம் இவற்றுள் எது வலிமை உடையது என அந்த லக்னம் விழுந்த இடத்தினை ஜென்ம நட்சத்திரமாகக் கொளல் வேண்டும். அதிலிருந்து வரும் நட்சத்திரங்கள் ஜென்ம, சம்பத்து, விபத்து, úக்ஷமம், பிரத்ய, சாதக, வதை, மைத்ர, பரம மைத்ர ஆகியவை ஆகும். ஜென்ம நட்சத்திரத்திலிருந்து சம்பத்து, úக்ஷமம், சாதக, மைத்ர, பரம மைத்ர நட்சத்திரங்களில் அமைந்த கிரகங்களின் பாவ பலன்கள் விருத்தியாகும். அதாவது வளர்ச்சியடையும்.
ஜென்ம நட்சத்திரத்திலிருந்து ஜென்ம, விபத்து, பிரத்ய, வதை நட்சத்திரங்களில் அமர்ந்த கிரகங்களின் பாவ பலன்கள் பின் தங்கும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். ஜென்ம நட்சத்திரத்திற்கு சம்பத், úக்ஷமம், சாதக, மைத்ர, பரம மைத்ர நட்சத்திரங்களில் அமர்ந்த கிரகங்கள், ஜென்ம லக்னத்திற்கு கேந்திர, திரிகோண ராசிகளில் அமர்ந்தால் அந்த கிரகங்களின் பலாபலன்கள் அபிவிருத்தியடையும்.