சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (3) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகிலுள்ள எதிரிசிங்க மாவத்தையில் உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறிய ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மிரிஹான எதிரிசிங்க வீதி 1ஆம் லேனில் வசிக்கும் நாணயக்கார போபே ருவன் வீரதுங்க (53) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மஹரகம – நுகேகொட வீதியில் எதிரிசிங்க மாவத்தை சந்தியில் மின்மாற்றியுடன் கூடிய மின்கம்பத்தில் ஏறி உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தை அவரது மகன் நேரில் பார்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது