நாங்க போற? நீங்க வாறா?: ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸினால் போராட்டம்

Date:

மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாங்க போற? நீங்க வாறா? போராட்டம் எழுச்சி பூர்வமாக வெள்ளிக்கிழமை(1) மாலை இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சந்தியில் இருந்து ஆரம்பமான இப்போராட்டம் அட்டாளைச்சேனை நகரப்பகுதி வரை ஊர்வலமாக பல்வேறு சுலோகங்களை தாங்கி சென்றதை காண முடிந்தது.

சுமார் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இதன் போது குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

குறித் போராட்டம் காரணமாக அக்கரைப்பற்று கல்முனை மற்றும் அருகிலுள்ள பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை சீர் செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர்.அத்துடன் இப் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் இப்போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர் , ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் , உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

-பா.டிலான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்