வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள மதுபானசாலைக்கு முன்பாக ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்தில் இன்று (02) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மதுபானசாலை மூடியதன் பின்னர் மதுபானசாலைக்கு முன்னால் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன் போது ஓர் நபர் தனது மோட்டார் சைக்கிலில் வைத்திருந்த மரம் அறுக்கும் வாள் மூலம் மற்றைய இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திற்கு செல்ல முற்பட்ட போது மற்றைய இருவரும் இணைந்து அவரின் வாளை பறித்து அவர் மீதும் வாள் மற்றும் கற்களால் தாக்குதல் மேற்கொண்டதுடன் தாக்குதலில் காயமடைந்த நபர் அங்கிருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சமடைந்தார்.
அதன் பின்னர் மற்றைய இருவரும் அவ்விடத்திற்கு வாள்களுடன் வெளியேறி சென்றதுடன் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.