அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது பணி அடையாள அட்டையை காண்பித்து ஊரடங்கு வேளையில் பயணிக்காலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை இன்று மாலை 6.00 மணி வரை நீண்ட மற்றும் குறுகிய தூர பஸ் சேவைகளை மாத்திரம் இயக்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.
திங்கட்கிழமை (4) காலை 6.00 மணி முதல் பஸ்கள் வழமை போன்று மீண்டும் இயங்கும் என அவர் தெரிவித்தார்.
திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை பயணிகள் புகையிரதங்கள் இயங்காது என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டத்தின் போது அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என திணைக்களம் விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பயணிகள் ரயில்கள் – இரவு அஞ்சல் ரயிலைத் தவிர – அட்டவணைப்படி இன்று மாலை இயக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் இடங்களைச் சென்றடையும்.