14 வயது சிறுமியை 10 நாட்களாக பல இடங்களில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
8 காமுகர்களும், ஹொட்டல் முகாமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இப்பலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியான 14 வயதான சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி தாயாருடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சிறுமியை காணவில்லையென 15ஆம் திகதி தாயார் முறைப்பாடு செய்தார். இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காமுகர்கள் சிக்கினர்.
கெக்கிராவ நகருக்கு வந்த சிறுமியை காமுகர்கள் குழு ஏமாற்றி அழைத்து சென்று, கெக்கிராவ நகருக்கு வெளியிலுள்ள இசை அரங்கு ஒன்றிற்கு அழைத்து சென்று கடுமையாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் பொலிசார் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் பின்னர், 10 நாட்கள் சிறுமி பலவந்தமாக பல இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கெக்கிராவ, இபலோகம மற்றும் பல பகுதிகளில் உள்ள பெண்ணும, வலவ்வேகம, கண்ணன்மடுவ பிரதேசங்களின் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டு பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ, ரத்மல்கந்த, திப்பட்டுவெவ மற்றும் இபலோகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த குமாரசேகர, அஸீஸ் அஹமட், சஹரன் நியாஸ், எஸ்.விஸ்வநாத், எம்.ஐயாஸ், எஸ்.எல்.ஏகநாயக்க, கித்சிறி இளங்கசிங்க, கருணாதிலக ஜயசிங்க மற்றும் இப்பலோகம கெக்கிராவ வீதியில் உள்ள ஹோட்டல் முகாமையாளர் சபிதா குமாரிஹாமி ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை கடுமையான பாதுகாப்பின் கீழ் தங்க வைக்குமாறு கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரி கருணா கீர்த்திரத்னவுக்கு பதில் நீதிபதி உத்தரவிட்டார்.
சிறுமி துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கெக்கிராவ மற்றும் இப்பலோகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.