இன்று காலை சுகாதார அமைச்சு வளாகத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச குடும்ப நல உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தாதிய உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு தெரிவித்தார்.
வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் பதவி உயர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொடிதுவாக்கு தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்ப நல உத்தியோகத்தர்கள்களும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1