கர்ப்பிணி ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இரு குற்றவாளிகளை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
போலீஸ் காவலில் உள்ளவர் தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் கடந்த 29ஆம் திகதி இரவு நடந்தது.
கண்ணங்காடு கோட்டச்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வளர்க்கப்பட்ட நான்கு மாத கர்ப்பிணி ஆடு செந்தில் உட்பட மூவரால் இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது.
இந்த ஹோட்டலில் செந்தில் ஊழியர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் ஆட்டின் அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் வந்தபோது, மூவரும் ஆட்டை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் தப்பியோடினர்.
ஆனால் செந்திலை மற்ற ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தப்பியோடிய இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குற்றவாளிகள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.