இலங்கை தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது இதனை தெரிவித்தார்.
நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க சர்வதேசத்தின் ஆதரவு தேவை. பொதுமக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், நாட்டை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனவாதம் மற்றும் தீவிரவாதத்தின் மூலம் நாட்டை உயர்த்த முடியாது, அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி நிற்கும் என்றார்.
பாலஸ்தீனம், ஓமன், குவைத், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது பல முக்கிய இராஜதந்திர விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1