2022ஆம் ஆண்டு ஒஸ்கார் விருது விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை, சிறந்த நடிகர் விருது வென்ற நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.
94வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.
அதுபோலவே ஒஸ்கார் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒஸ்கார் விருது விழாவை இந்த ஆண்டு 3 தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கினர்.
இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதினை ‘கிங் ரிச்சர்ட்’ படத்திற்காக வில் ஸ்மித் வென்றுள்ளார். அப்போது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ரொக், வில் ஸ்மித்தின் மனைவியின் சிகையலங்காரம் பற்றி அனைவர் முன்பும் கேலி செய்துகொண்டிருந்தார்.
தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ரொக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி நகைச்சுவையாகப் பேசினார்.
விருதை வழங்கும்போது, பிங்கெட் ஸ்மித்தின் மொட்டையடிக்கப்பட்ட தலையைப் பற்றி ரொக் கிண்டல் செய்தார். சமீப காலங்களில், முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியாவுடன் பிங்கெட் போராடிக் கொண்டிருப்பதாக கூறினார்.
ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைக்கு ஏறி வந்தார். அப்போது, தொகுப்பாளர் கிறிஸ் ரொக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கீழே இறங்கிச் சென்றார்.
இந்த காட்சியை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Here’s the unedited Will Smith slap of Chris Rock. This looks real. They bleeped it all out on the American version. pic.twitter.com/2fIoL05gO8
— Clay Travis (@ClayTravis) March 28, 2022
இதேவேளை, இந்த சம்பவம் முன்னரே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது என கூறுவோரும் உள்ளனர்.