25.4 C
Jaffna
December 28, 2024
Pagetamil
குற்றம்

நங்கூரம் திருடிய கடற்படை சிப்பாய் கைது!

யாழ்.மாதகல் கடற்கரையில் மீனவர்களின் படகுகளிலிருந்த நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் மாதகல் – லுார்து மாதா கோவிலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் தரித்து விடப்படும் மீனவர்களின் படகுகளில் இருந்த நங்கூரங்கள் களவாடப்பட்டு, பட்டா ரக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பாக இளவாலை பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் நங்கூரம் ஏற்றிய வாகனம் மடக்கி பிடிக்கப்பட்டது.

இதன்போது கைதான சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடற்படை வீரர் ஒருவரே நங்கூரங்களை திருட உதவியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

அதனை அடுத்து முன்னெடுக்கப்பட்டு வந்த மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் கடற்படை வீரர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 2வது கணவன்!

Pagetamil

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

Leave a Comment