Pagetamil
விளையாட்டு

IPL 2022: முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!

வான்கடே மைதானத்தில் நடந்த முதல் ரி20 போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி முதல் வெற்றியை பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 15வது சீசனின் முதல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

இரு அணிகளுமே புதிய கப்டன்கள் தலைமையில் களமிறங்குவதால் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக இருந்தது. அதன்படி, ரொஸ் வென்ற கொல்கத்தா கப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சென்னை அணியின் ஓப்பனிங் வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே களமிறங்கினார். முதல் ஓவரை வீசிய உமேஷ் யாதவ் சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார். மூன்றாவது பந்திலேயே ருதுராஜ்ஜை ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் வெற்றியேற்றிய உமேஷ், தனது அடுத்த ஓவரில் மூன்றே ரன்களை எடுத்திருந்த கான்வேவையும் அவுட் ஆக்கி சென்னை அணியின் சரிவை தொடங்கி வைத்தார்.

இதன்பின் வந்த உத்தப்பா தலா இரண்டு பவுண்டரி, சிக்ஸர் என அதிரடியாக ஆரம்பித்தாலும் அவரும் 28 ரன்களுக்கு நடையை கட்டினார். அம்பதி ராயுடு 17 ரன்களுக்கும், ஷிவம் துபே 3 ரன்களுக்கும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, ஆட்டம் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பக்கம் சாய்ந்தது. அடுத்தடுத்த ஓவர்களில் அந்த அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி ரன்களை கட்டுப்படுத்தினர். 16 ஓவர்களில் சென்னை அணி 70 ரன்களை தொட முடியவில்லை. 19வது ஓவரின் பாதியில் தான் 100 ரன்களை தொட்டது.

அதுவும், முன்னாள், இந்நாள் கப்டன்கள் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து ஓரளவு விளையாடியதால் இந்த அளவு ஸ்கோரை எடுக்க முடிந்தது. தோனி அடுத்தடுத்து சில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதமும் கடந்தார். அவரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 50 ரன்களுடனும், ஜடேஜா 26 ரன்களுடனும் ஆ;டமிழக்காமல் இருந்தனர்.

132 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அஜிங்கியா ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது.

இந்தக் கூட்டணியை பிராவோ பிரித்தார். 16 ரன்கள் எடுத்த நிலையில் பிராவோ வீசிய 7வது ஓவரில் தோனியிடம் கட்ச் கொடுத்து வெங்கடேஷ் ஐயர் அவுட் ஆகினார். இதன்பின் வந்த ராணா அதிரடியாக விளையாடினாலும், 21 ரன்களில் அவரும் பிராவோ பந்துவீச்சில் அவுட் ஆகினார். மறுமுனையில் பொறுப்பாக விளையாடி வந்த அஜிங்கியா ரஹானே 44 ரன்கள் எடுத்திருந்தபோது சான்டனர் பந்துவீச்சில் தூக்கடி அடிக்க முயன்று ஜடேஜாவிடம் கட்ச் ஆனார்.

எனினும் அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ் இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக சாம் பில்லிங்ஸ் இறுதிக்கட்டத்தில் சென்னை அணியின் பந்துவீச்சை எல்லைக்கோடுகளுக்கு பறக்கவிட்டார். இதனால் 18.3 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அந்த அணியில் கப்டன் ஷ்ரேயாஷ் ஐயர் 20 ரன்களுடன், ஷெல்டன் ஜாக்சன் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை அணியில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

Leave a Comment