தமிழ் சினிமாவில் நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மனதை பெருமளவில் கொள்ளை கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதைத் தொடர்ந்து அவர் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தார்.
தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் களமிறங்கி ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ராஷ்மிகா சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான புஷ்பா படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவார்.
அந்த வகையில் அவர் தற்போது சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிக்குமோ, இல்லையோ? எனக்கு தெரியாது. ஆனால் நான் பதிவிடுவேன். ஏனென்றால், உடற்பயிற்சிக்கு தொடர்முயற்சி தேவை என பதிவிட்டுள்ளார்.
அது வைரலாகி வருகிறது.