25.3 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

வீதியில் திடீரென தீப்பிடித்த கார்!

தெமட்டகொட பேஸ்லைன் மேம்பாலத்தில் இன்று மதிம் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளையில் இருந்து ஒருகொடவத்தை நோக்கி பயணித்த வாகனத்தில் இருவர் இருந்தனர். தீ விபத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

காரின்  இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததுடன், வீதி முழுவதும் புகை மண்டலமாக இருந்ததால் அந்த வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.

கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்த போதிலும், கார் ஏற்கனவே தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது.

காரில் பயணித்தவர்கள் கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

அர்ச்சுனாவை தகுதி நீக்கும் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் ஆணின் சடலம்: விசாரணைகள் தீவிரம்

east tamil

தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – மனோ கணேசன் எம்பி

east tamil

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

Leave a Comment