பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் சூப்பர் ஹிட் படமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நயன்தாரா சக்கரவர்த்தி என்ற நடிகை நடிக்கவுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா சக்கரவர்த்தி என்பவர் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த குசேலம் திரைப்படத்தில் பசுபதியின் மகளாக நடித்த இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மேலும் ’ஜென்டில்மேன் 2’ படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆகிய மொழிகளில் உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்எம் கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy to Introduce #NayantharaaChakravarthy as the lead actress in #Gentlemen2#ஜென்டில்மேன்2 #ജെന്റിൽമാൻ2#జెంటిల్మాన్2#ಜಂಟಲ್ಮನ್2@mmkeeravaani #GentlemanFilmInternational@ajay_64403 @johnsoncinepro @UrsVamsiShekar @Fridaymedia2
Another lead actress will be revealed soon pic.twitter.com/2MMkuCHF6N
— K.T.Kunjumon (@KT_Kunjumon) March 23, 2022