இலங்கைக்கான நிதி உதவிகளின் போது, இராணுவச் செலவினங்களைக் கடுமையாகக் குறைக்கும் என்பதை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) கடிதம் எழுதியுள்ளார் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியின் செலாளர் வீ.ஆனந்தசங்கரியின் புதல்வருமான ஹரி ஆனந்தசங்கரி, .
“உணவு, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் குறைக்கப்படாமல் இருப்பது அவசியம். ஒட்டுமொத்த அரசின் செலவீனத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமான இராணுவச் செலவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மார்ச் 20ஆம் திகதியிடப்பட்டு, IMF நிர்வாக இயக்குனர் Kristalina Georgieva க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1