வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி நேற்று இரவு 8.00 மணியளவில் பிலியந்தலை மாவிட்டரவில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை, மாவிட்டரை, கம்வனவத்தையைச் சேர்ந்த எபசிங்க கனிஷ்க (41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் முன் அதிக சத்தத்துடன் ஒருவர் மோட்டார் சைக்கிளை பலமுறை ஓட்டிச் சென்றதாகவும், அமைச்சரின் சாரதிக்கும், அவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, ஒரு குழுவினருடன் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், சாரதியை கத்தியால் குத்தி விட்டு, தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பலத்த காயமடைந்த அமைச்சரின் சாரதி பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.