சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் எரிபொருள் சுத்திகரிப்பு நடவடிக்கைகள், நாளை (21) முதல் இடைநிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
பல விலைமனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் போதுமான மசகு எண்ணெய் கிடைத்த பின்னர், எரிபொருள் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் மீண்டும் ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்தார்.
இப்போது நாடு பெற்றோல், டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெறுகிறது என்று குறிப்பிட்ட அவர், ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து மசகு எண்ணெய் கிடைத்தால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.
போதுமான மசகு எண்ணெய் கிடைக்கும் வரை இந்த செயல்முறை தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1