சுமார் 125 மில்லியன் ரூபா பெறுமதியான 6 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு கடத்த முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்த போது, குறித்த தங்கத்துடன் ஆர்மர் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தங்கம் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு கடத்த தயாராக இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட மாதகல் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1