சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதிக்குள் ஆடைகளின் விலை 45-50 வீதத்தால் அதிகரிக்கும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக ஆடைகளின் விலைகள் அதிவேகமாக அதிகரிக்கும் என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
வியாபாரிகள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றார்.
31 வீதத்தால் விலைகள் அதிகரிக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் வர்த்தகர்கள் இருப்பதாக குமார கூறினார்.
எவ்வாறாயினும், டொலர் வீதத்தின் தினசரி ஏற்ற இறக்கங்கள் காரணமாக 45-50 வீதத்திற்கு இடையில் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதிக விலை காரணமாக பொதுமக்கள் துணிகளை வாங்காமல் இருப்பதாலும், நுகர்வோர் ஆடைகளுக்கு அதிக தொகையை செலவிட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.