’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் நாயகி பிரியங்கா அருள் மோகனுக்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் பரிசு அளித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
சூர்யா, பிரியங்கா அருள்மோகன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது என்பதும் 100 கோடிக்கு மேல் வசூலை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் நடிகை பிரியங்கா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் சூர்யா அனுப்பிய சர்ப்ரைஸ் பரிசு குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை பிரியங்கா தற்போது சிவகார்த்திகேயனுடன் ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.