Pagetamil
சினிமா

கௌதம் கார்த்திக் காதலை மஞ்சிமா ஏற்கவில்லையா?

நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் காதலிப்பதாகவும் இந்த காதலை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் மஞ்சிமா பிறந்தநாளுக்கு கௌதம் கூறிய வாழ்த்து இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த காதலை இரு தரப்பு பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டதாகவும் விரைவில் திருமண அறிவிப்பு வரும் என்றும் செய்திகள் வெளியானது .

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் காதலை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மஞ்சிமா மோகன் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘என் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்களை யாரிடமும் நான் மறைத்ததில்லை. ஒவ்வொரு மகிழ்ச்சியையும் நான் மக்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறேன். அது சின்னதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் நான் தவறாமல் கூறி வருகிறேன்.

அப்படி இருக்கும்போது திருமணம் போன்ற பெரிய நிகழ்வை நான் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் குறித்த தகவலை அவர் தொடர்ந்து வெளியிட்ட போது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. நான் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த செய்தியை அவர் என்னிடம் வெளியிட்ட போது நான் அதை மறுக்கவே செய்தேன்.

இந்த விஷயத்தில் என் பெற்றோர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று அச்சமாக இருக்கும் நிலையில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியை அடுத்து கௌதம் கார்த்திக்கை மஞ்சிமா காதலிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!