தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு வீ.ஆனந்தசங்கரிக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் உட்கட்சி மோதல் சூடு பிடித்துள்ளது.
முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் அரவிந்தன் தலைமையிலான ஒரு பகுதியினர் கட்சிக்குள் ‘கிளர்ச்சியில்’ ஈடுபட்டுள்ளதுடன், கட்சி தலைமையையும் கைப்பற்ற முயன்று வருகிறார்கள்.
எனினும், அவர்களிடம் கட்சியை ஒப்படைக்க மாட்டேன் என தெரிவித்துள்ள வீ.ஆனந்தசங்கரி, புதியவர்களை கட்சிக்குள் இணைத்து, அவர்களிடம் கட்சியை ஒப்படைக்க முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில், அதிருப்தியாளர்களின் அழுத்தத்தினால் அண்மையில் கட்சியின் பொதுக்குழு, மத்திய செயற்குழு கூட்டப்பட்டது. இதில் புதிய நிர்வாகம் தெரிவ செய்யப்பட்டதாக அறிவித்தனர்.
அவர்களின் அறிவிப்பின்படி, வீ.ஆனந்தசங்கரி தற்போது கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை.
எனினும், அதிருப்தியாளர்களின் அறிக்கை வீ.ஆனந்தசங்கரி நிராகரித்துள்ளார். தானே உண்மையான செயலாளர் நாயகம் என்று, கட்சி தனது கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, எதிர்வரும் சனிக்கிழமை (19)கிளிநொச்சியில் கட்சியின் பொதுக்குழு மற்றும் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கு எதிராக, எதிர்தரப்பினர் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தை நாடினர்.
நீண்ட விசாரணையின் பின்னர், வீ.ஆனந்தசங்கரி நாளை கூட்டவிருந்த கூட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.