நாடு பூராகவும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள நற்பிட்டிமுனை லிட்ரோ எரிவாயு விநியோக நிலைய மொத்த விற்பனை நிலையத்தை நாடி கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு ,பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை தந்து காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்
சிலர் பொறுமையுடன்தினமும் எரிவாயு சிலிண்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளின் மேற்பார்வையில் 600 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று நற்பிட்டிமுனை எரிவாயு மொத்த விற்பனை நிலையத்திற்கு எதிரில் காத்திருக்கும் பெண்மணியின் காட்சி இணைக்கப்பட்டுள்ளது.
-பா.டிலான்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1