25.1 C
Jaffna
January 14, 2025
Pagetamil
குற்றம்

பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தென்மராட்சி பாடசாலை ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் உறவினர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர், சிகிச்சையின் பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மீசாலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரே  மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டார்.

13 வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக ஆசிரியர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை சிறுவனை வீட்டிற்கு அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக மாணவனின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறுவனின் குடும்பத்தினர், ஆசிரியரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த ஆசிரியர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிறுவனும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வீடு புகுந்து தன் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியரும், சிறுவனின் குடும்பத்தினர் மீது முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுவனின் முறைப்பாட்டின் அடிப்படையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர், இன்று ஆசிரியரை சாவகச்சேரி பொலிசார் கைது செய்தனர்.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டை ஆசிரியர் மறுத்துள்ளார்.

மாணவன் நாளை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்.

ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறுவனின் தாயார் உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களை பொலிசார் தேடி வருகிறார்கள். அவர்கள் தமைறைவாகி விட்டனர்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் யுவதியை பேய் கடத்தியதா?: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

போலி விசாவில் ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் நபர் சிக்கினார்!

Pagetamil

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

Leave a Comment