27 C
Jaffna
January 17, 2025
Pagetamil
கிழக்கு

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அமைதி இன்மை-இறுதி நேரத்தில் சமரசம்

இன்றும் (13) நேற்றும் (12) அம்பாறை மாவட்டத்தில் உள்ள நற்பிட்டிமுனை லிட்ரோ எரிவாயு விநியோக நிலைய மொத்த விற்பனை நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட சுமார் 600 க்கும் அதிகமான சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு ,பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் உள்ள களஞ்சியசாலையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து அங்கு எரிவாயு கொள்வனவு செய்ய வருகைதந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த வந்த உத்தியோகத்தர்களினால் நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தற்போது நாட்டில் உள்ள களஞ்சிய சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில் எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக தகவல் பரவியதை அடுத்து பொது மக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே காத்திருந்து எரிவாயுவை பெற அங்கு சென்றிருந்தனர்.

எனினும் எரிவாயு களஞ்சிய பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டு நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரடியாக அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன வழிகாட்டலில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான எச்.ஏ நபார் , ஏ.எச்.எம் முபீன் ஆகியோர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.இருப்பினும் எரிவாயு கொள்வனவிற்காக வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததுடன் அமைதி இன்மையும் அப்பகுதியில் ஏற்பட்டது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.எனினும் கல்முனை பொலிஸார் அங்கு வருகை தந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் களஞ்சிசாலையில் 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு இருப்பதை அவதானித்த சிலர் அங்கிருந்த ஏனையோருக்கும் தெரியப்படுத்தி, சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி அங்கிருந்த எரிவாயு மொத்த விற்பனை நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.லிட்ரோ சமையல் எரிவாயு மொத்த விநியோக நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதனையடுத்து அங்கு வருகை தந்த நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான எச்.ஏ நபார், ஏ.எச்.எம் முபீன் ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துரையாடிய பின்னர் மொத்த விற்பனை நிலைய பொறுப்பாளர்களுடன் பேசி தமக்கு 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் மொத்த விற்பனை நிலைய வளாகத்திற்குள் சென்ற நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகள் மொத்த விற்பனை நிலைய பொறுப்பாளர்களுடன் 12.5 சமையல் எரிவாயு களஞ்சியசாலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலைகளை கேட்டறிந்தனர்.

இதன் போது களஞ்சியசாலையில் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு இருப்பது உண்மை எனவும் அது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் விநியோகம் செய்யவே வைக்கப்பட்டுள்ளது என்றும் 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு இருப்பதாகவும் அதனை வழங்க முடியும் எனவும் மொத்த விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து எரிவாயு மொத்த விற்பனை நிலையை பொறுப்பாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்திய நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து 12.5 கிலோ கிராம் எரிவாயு வழங்கி வைக்கப்பட்டு நிறைவடைந்த பின்னர் ஏலவே டோகன் வழங்கப்பட்டவர்களுக்கு 5.0 மற்றும் 2.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு மாத்திரம் விநியோகிகப்பட்டது.பின்னர் காலந்தாழ்த்தி 12.5 சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்ற நற்பிட்டிமுனை மொத்த விற்பனை நிலையத்தில் 2.3 கிலோ கிராம் மற்றும் 5.0 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரம் நுகர்வோர் இடையே சீராக விநியோகம் செய்யப்பட்ட போதிலும் 12.5 கிலோ கிராம் சிலிண்டர் விநியோகத்தில் மாத்திரம் தான் பெரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதாக அங்குள்ள நிறுவன அதிகாரி குறிப்பிட்டார்.சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாய்வுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதனால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்திருந்தனர்.

இதனால் பேக்கரி உரிமையாளர்கள் ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்பட்டிருந்ததுடன் இம்மாவட்டத்திலுள்ள சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் ‘சமையல் எரிவாயு இல்லை’ என்கின்ற பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தது.இதனால், சமையல் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக, வெற்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வரும் மக்கள் ஏமாற்றத்துடனேயே வீடுகளுக்கு திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

மேலும் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக ஓட்டோ ,மோட்டார் சைக்கிள்கள், என்பவற்றில் ஒவ்வொரு நாளும் நேரகாலத்துடன் வருகை தந்து வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.இவ்வாறு வருகை தரும் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகிறமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறு குறித்த எரிவாயுக்களை பெற லிட்ரோ சமையல் எரிவாயு மொத்த விநியோக நிலையத்திற்கு முன்பாக ஆண்களும் , பெண்களும் என மக்கள் நீண்ட வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.

DCIM101MEDIADJI_0185.JPG

மேலும் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் நீங்கிவிடும் லிற்றோ காஸ் நிறுவனம்´ தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் காஸ் சிலிண்டர்கள் நேற்று (11) பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் காஸ் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.தற்போது லிட்ரோ நிறுவன வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 2800 ரூபாவுக்கு விற்பனையாகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் – மக்கள் அவதி

east tamil

அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளையின் நிர்வாக சபை தெரிவு

east tamil

கடவுச்சீட்டு அலுவலகம் அவசியம்: திருகோணமலை மக்களின் கோரிக்கை

east tamil

அழுகிய நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம்

east tamil

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (TID) தளம் அமைப்பினர் விசாரணை

east tamil

Leave a Comment