வடக்கு, கிழக்கில் நீதிபதிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட புதிய இடமாற்றங்களின்படி,
மல்லாகம் மாவட்ட நீதிபதி அலெக்ஸ் ராஜா, பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாகவும்,
பருத்தித்துறை மாவட்ட நீதிபதி காயத்திரி சைலவன், மல்லாகம் மேலதிக மாவட்ட நீதிபதியகவும்,
மன்னார் மாவட்ட நீதிபதி சிவக்குமார், மல்லாகம் மாவட்ட நீதிபதியாகவும்,
மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி அனந்தராஜா, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதியாகவும்,
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதியாக ஜமீல்,
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிபதியாக சுபாஜினி, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதியாக ரஞ்சித்குமார் ஆகியோர் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாண தொழில் நியாயசபை தலைவராக திருமதி கணேசானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை, அம்பாறை,மட்டக்களப்பு மாவட்ட தொழில் நியாயசபை தலைவராக சியான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் யாவும் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் புதிதாக திறக்கப்பட்ட மேல் நீதிமன்றம் இயங்க ஆரம்பிக்கும்.
அத்துடன், யாழ்ப்பாண குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு புதிதாக மேலதிக நீதிபதி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.