26 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

கச்சதீவு அந்தோனியார் வருடாந்த திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் – கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நேற்று கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

மேலும் இவ் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந் நிகழ்வில் வடமாகாண கடற்படை தளபதி பிரியந்த பெரேரா, ஓய்வுபெற்ற கடற்படை தளபதி அட்மிரல் விஜய குணரட்ண, யாழிற்க்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன், நெடுந்தீவு பிரதேச செயலர் சத்தியசோதி மற்றும் மதகுருமார்கள், கடற்படை இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் வீதியில் சாகசம் காட்டிய தனியார் சிற்றூர்தியின் வழித்தட அனுமதி இரத்து!

Pagetamil

பல்கலைக்கழக வளாகங்களாக மாறும் தேசிய கல்வியியல் கல்லூரிகள்

east tamil

சிகிரியாவுக்காக நிதி உதவியை முன்மொழிந்த கொரிய நிறுவனம்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

பெரஹரா யானை தாக்கியதில் ஒருவர் காயம்

east tamil

Leave a Comment