25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

எரிபொருள், மின்சார பிரச்சனையை தீர்த்து விடலாம்; ஆனால் தமிழ் கட்சிகளால் வரும் பிரச்சனையை தீர்க்க முடியாது: க.சுகாஷ்

தமிழ் மக்கள் இனத்துக்காக ஒன்று திரண்டு எழுச்சி பெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் நேற்று (09) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள், மின்சாரம், மெழுகுதிரி என்பன தட்டுப்பாடு காரணமாக இந்த நாடு இருட்டிற்குள் உள்ளது. அந்த இருட்டை எதிர்காலத்தில் மாற்ற முடியும். ஆனால் 13 வது திருத்தச் சட்டம் என்ற இருட்டை நாங்கள் எங்களது இனப்பிரச்சரனக்கான தீர்வாக ஏற்போகமாக இருந்தால் அதனால் வரும் இருட்டில் இருந்து எமது இனத்தை எவரும் காப்பாபற்ற முடியாது. இந்த உண்மைகளை மக்களுக்கு மாவட்டம் மாவட்டமாக சென்று சொல்லி வருகின்றோம். இந்த 13 வது திருத்த சட்டத்தை ஏற்றால் எமது இனம் அழியும் என்பதற்காக தான் இன்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இதை நிராகரித்தார்கள். இதை ஏற்க முடியாது என அப்போதே நிராகரிக்கப்பட்டது. இது செத்த பிணம் என வர்ணிக்கப்பட்டப்பட்டது. தமிழ் மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. காணி, பொலிஸ், நிதி, நீதி அதிகாரங்கள் இல்லை. இறைமை இல்லை. தன்னாட்சி இல்லை. சுயநிர்ணய உரிமை இல்லை. எங்களது காணிகளை நாம் பிரித்து கொடுக்க முடியாது. சிங்களவர்களை கொண்டு வந்தது குடியேற்றினால் அதனை தடுத்து நிறுத்த முடியாது.

வெறும் பேச்சுக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சுக்களை நியமிக்க முடியும். அதைக் கூட ஆளுனர் தான் நியமிப்பார். எங்களது உரிமையை நாம் பயன்படுத்த வேண்டும். இன்று தென்னிலங்கை மக்கள் மின்சாரத்திற்காக வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆகவே, நாம் எமது வாழ்க்கைக்காக வீதிக்கு இறங்க வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றால் உங்களது பிள்ளைகள் தமிழராய் இருக்கப் போறதில்லை. பேரப்பிள்ளைகள் தமிழில் படிக்க முடியாது. உங்களது வீட்டிற்கு பக்கத்தில் சிங்கள குடியேற்றம் வரும். இதை தடுக்க வேண்டும் என்றால் 13 வது சட்டத்தால் எதையும் செய்ய முடியாது. அதற்கு எங்களுக்கு சமஸ்டி அதிகாரம் வேண்டும். அதற்காக தான் நாங்கள் 50 ஆயிரத்திற்கு அதிகமான உறவுகளை இழந்துள்ளோம். 1 இலட்சத்து 47600 இற்கு மேற்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது உறவுகள் 1500 நாட்களைத் தாண்டி கண்ணீரும் கம்பளையுமாக போராடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை வேண்டும். இவற்றுக்காக 13 வது திருத்தச் சட்டத்தையும், உள்ளக விசாரணையையும் நீக்க வேண்டும்.

வாய்ப்பு வரும். கடந்த காலத்தில் வாய்ப்பு வந்த போது எங்களது துரோக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை போட்டு உடைத்தது. மீண்டும் எதிர்காலத்தில் வாய்ப்புக்கள் வருகின்ற போது தமிழ் தேசிய மக்கள் முன்னனி போன்ற தரப்புக்கள் பேரம் பேசல் நிலையில் இருக்கும் போது அதனை பேரம் பேசும் வாய்ப்புக்கள் இருக்கிறது. உலகமே இலங்கையை பார்த்துக் கொண்டிருக்கிறது. சீனா, இலங்கை, அமெரிக்கா போன்றன பூகோளப் போட்டியில் உள்ளது. இந்த நேரத்தில் 34 வருடமாக நிராகரித்த ஒன்றை வேண்டும் என்று கேட்பதா அல்லது சமஸ்டியை கேட்பதா? இது அந்த ஆறு கட்சிகளுக்கு விளங்கவில்லையா?

இது சாதாரண மக்களுக்கு விளங்குது. தமிழரைசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டனி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கட்சி என்பவற்றுக்கு விள்ளங்வில்லையா? அவர்களுக்கும் விளங்கும். ஆனால், அவர்களுக்கு தேவையானது கிடைப்பதால் அவர்கள் விளங்காத மாதிரி நடிக்கிறார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றப் பாக்கிறார்கள். எமது மக்கள் ஏமாளிகளா? இல்லை. தெளிவாக சிந்தித்து இனத்துக்காக முடிவெடுங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு மைதானத்தில் இனமாய் எழுந்து வாருங்கள். உங்கள் இனத்திற்கான வரலாற்று கடமை இது. இதனை உங்கள் சந்ததிக்காக நிறைவேற்றுங்கள்.

கடந்த 30 ஆம் திகதி கிட்டு பூங்காவில் பல்லாயிக்கனன்கான மக்கள் எழுந்து வந்து 13 வது திருத்தச் சட்டத்தையும், ஒற்றையாட்சியையும் நிராகரிப்பதாகவும், சமஸ்டியே வேண்டும் எனவும் உரத்து சொன்னார்கள். இதனை நாம் மாவட்டம் மாவட்டமாக சொல்லி வருகின்றோம். வவுனியா மாவட்டத்தில் சொல்வதற்கும் அணி திரளுங்கள் எனத் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அறுவடை காலத்தில் பெய்யும் மழையால் அழிவடைந்தது வயல்கள்

Pagetamil

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்!

Pagetamil

பாரவூர்தி தட்டுப்பாடு – துறைமுகத்தில் நெருக்கடி

east tamil

கல்கிசை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

east tamil

Leave a Comment