முல்லைத்தீவில் பிரதேச சபை உறுப்பினர்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களே இன்று மாட்டு வண்டிலில் பிரதேச சபைக்கு சென்று கவனிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 46வது மாதாந்த அமர்வு இன்று இடம்பெறவுள்ள நிலையில் மாதாந்த அமர்வுக்கு மாட்டு வண்டியில் சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை காரணம் காட்டி இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனவும் இதற்க்கு பொறுப்பான அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என கோரியுமே கவனயீர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது. இதன் போது மாட்டு வண்டிலில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள் பிரதேச சபை நோக்கிச் சென்று சபை அமர்வில் கலந்துகொண்டனர்.
-கே.குமணன்-