அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி, யாழ்ப்பாண பின்னணியுடைய தாயும், மகனும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்கு சிட்னியின் புறநகர் பகுதியான வென்ட்வொர்த்வில்லில் வெள்ளத்தில் ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று தெரிவித்துள்ளனர்.
அது காணாமல் போன ஹேமலதா சச்சிதானந்தம் (67), அவரது மகன் பிரமுத் (34) உடையதா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
எனினும், அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கால்வர் ஒன்றில் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தது. காரில் ஆவணங்கள் காணப்பட்ட போதும், இருவரும் இருக்கவில்லை.
இந்த நிலையில், ஆண், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அது தாய், மகனுடையதா என்பதை உறுதி செய்யும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
ஹேமலதா சச்சிதானந்தம் யாழ்ப்பாண பின்னணியுடையவர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
1
+1
1
+1
1