25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
விளையாட்டு

Z எழுத்து பொறித்த ஆடையுடன் பதக்கம் வென்ற ரஷ்ய வீரர் மீது விசாரணை!

ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரரான இவான் குலியாக் தனது சீருடையில் Z எழுத்தை பொறித்திருந்தது சர்ச்சையாகியுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தப்படும் என சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கத்தாரின் தோஹாவில் வார இறுதியில் நடந்த உலகக் கோப்பை நிதொடரின் பதக்கம் பெறும் நிகழ்வில், இவான் குலியாக் தனது மேலாடையில் Z எழுத்தை பொறித்திருந்தார்.

உக்ரைன் மீது படையெடுக்கும் ரஷ்யாவின் கனரக வாகனங்களில் Z எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் படைநடவடிக்கையைஆதரிப்பதை காண்பிப்பதற்காக இவான் குலியாக் அந்த எழுத்தை அணிந்திருக்கலாமென கருதப்படுகிறது.

இந்த போட்டியில் உக்ரைன வீரர் தங்கம் வென்றார். அவருக்கு அருகில் வெண்கல பதக்கம் பெற நின்ற போது, Z எழுத்து பொறிக்கப்பட்டுள்ள ஆடையை அணிந்திருந்தார்.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய துருப்புக்கள் தங்கள் இராணுவ உபகரணங்களை உக்ரைனிலிருந்து வேறுபடுத்துவதன் மூலம் நட்புரீதியான துப்பாக்கிச் சூட்டைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக வாகனங்களில் Z அடையாளத்தை பொறித்துள்ளன.

சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு, குலியாக்கின் “அதிர்ச்சியூட்டும் நடத்தையை” கண்டனம் செய்ததுடன், விசாரணைக்கு அதன் சுயாதீன ஒருமைப்பாடு பிரிவைக் கேட்பதாக உறுதியளித்தது.

“இவான் குலியாக்கிற்கு எதிராக அவர்கள் முறையாக ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள் என்று எங்களுக்குத் தெரிவித்ததை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்று ஜிம்னாஸ்டிக்ஸ் நெறிமுறைகள் அறக்கட்டளை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களிற்கு சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு தடைவிதித்திருந்தாலும், அந்த தடை அமுலுக்கு வருவதற்கு முன்னர், 20 வயதான குலியாக் கத்தாரில் போட்டியிட்டார். என்றாலும், ரஷ்யக் கொடி அவரது சீருடையில் இருந்து ஏற்கனவே தடைசெய்யப்பட்டது.

விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குலியாக் தடையை எதிர்கொள்வார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

Leave a Comment